ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் என்னும் நிகழ்ச்சி எகிப்தில் ஒளிபரப்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எகிப்தில் அரசு முறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடக குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள் என்னும் நிகழ்ச்சியின் அரபு மொழிப் பதிப்பு, எகிப்து தேசிய தொலைகாட்சி நிலையம் உள்ளிட்ட முக்கிய ஊடகங்களில், உள்ளூர் நேரப்படி, செப்டம்பர் முதல் நாள் தொடங்கி ஒளிபரப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களில், எகிப்து மற்றும் அரபு பிரதேசங்களில் அல் அஹரம், மத்திய கிழக்கு செய்தி நிறுவனம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட முக்கிய ஊடகங்கள் இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு குறித்து முன்னறிவிப்பை வெளியிட்டன. எகிப்தின் பல்வேறு துறையினர் இதில் மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி, இரு தரப்பும் மானிடப் பண்பாட்டியல் துறையில் தொடர்புகளை வலுப்படுத்தவும், நீண்ட வரலாறுடைய பெரிய நாடுகளான எகிப்து மற்றும் சீனா, நாகரிக பரிமாற்றத்தை விரைவுபடுத்தவும் துணை புரியும் என்று அந்நாட்டின் பல்வேறு துறையினர்கள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author