14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடரின் பொருளாதாரம் பற்றிய செய்தியாளர் கூட்டம் மார்ச் 6ஆம் நாள் நடைபெற்றது. இதில் வளர்ச்சி சீர்திருத்தம், நிதி வரவு செலவு, வணிக அலுவல், நாணய பங்குப்பத்திரம் முதலியவை குறித்து, தொடர்புடைய பணியகங்களின் பொறுப்பாளர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
சீன மத்திய வங்கியின் ஆளுநர் பான் கொங்ஷெங் கூறுகையில், தொழில் நுட்ப புத்தாக்கத்துக்கான நாணய ஆதரவை அதிகரிக்கும் விதம், சீன மத்திய வங்கி, சீனப் பங்குப் பத்திர ஒழுங்குமுறைப் பணியகம், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளிட்ட பணியகங்கள், கடன் பத்திரச் சந்தையில் தொழில் நுட்பப் பகுதியை உருவாக்க திட்டமிட்டுள்ளன. மேலும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கம், தொழில் நுட்ப மேம்பாடு ஆகியவற்றுக்கான மறு கடன் கொள்கையை மத்திய வங்கி மேம்படுத்தி, மறு கடன் அளவை விரிவுபடுத்தும் என்று தெரிவித்தார்.