எகிப்து ஊடகங்களில் ஷிச்சின்பிங் கட்டுரை வெளியீடு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் எகிப்து நாட்டில் அரசுமுறை பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு எழுதிய கட்டுரை, செப்டம்பர் 1ஆம் நாள் எகிப்தின் அல்-அஹ்ராம், அல்-அக்பார் மற்றும் அல்-கோம்புரியா ஆகிய ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

70 ஆண்டுகளில் சிரமங்களை கூட்டாக எதிர்கொண்டு, புதிய பயணத்தை மேற்கொள்வது என்ற தலைப்பிலான இந்த கட்டுரையில், 70 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவும் எகிப்தும் தூதாண்மை உறவை அதிகாரப்பூர்வமாக நிறுவியதோடு, அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனான நவ சீனாவின் நட்பாரந்த ஒத்துழைப்பும் தொடங்கியது என குறிப்பிடப்பட்டுள்ளது. சிரமங்களை ஒன்றாக எதிர்கொள்ளும் சகோதரர்களாகவும், ஒத்துழைப்பில் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாளிகளாகவும், நட்புறவு மற்றும் பரஸ்பரக் கற்றலுக்கான முன்மாதிரியாகவும், சமத்துவம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையுடைய நண்பர்களாகவும், சீனாவும் எகிப்தும் எப்பொழுதும் இருந்து வந்துள்ளன.

சீனாவும் எகிப்தும் நாட்டின் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சியின் முக்கியக் கட்டத்தில் உள்ளன. இருநாடுகள் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும், பரஸ்பர நன்மை பயனளிக்கும் வெற்றி பெறவும், தனித்துவமான கலாச்சாரங்களை மதித்து நாகரிகங்களைப் பரிமாற்றம் மேற்கொள்ளவும், சமத்துவம் மற்றும் நீதியை பேணிக்காக்கவும், சீனா-அரபு மற்றும் சீனா-ஆப்பிரிக்கா ஒத்துழைப்பை கைகோர்த்து வழிநடத்தவும் வேண்டும்.

மேலும், செழிப்பு மற்றும் மறுமலர்ச்சி பாதையில் ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கவும், நாட்டின் வளர்ச்சி மற்றும் இருநாட்டு உறவுகளின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும், எகிப்துடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author