சரசரவென சரிந்த தங்கம் விலை..!!

Estimated read time 1 min read

உலகளவில் அதிகமாக தங்கம் புழக்கத்தில் இருக்கிற நாடாக இந்தியா திகழ்கிறது. ஆனால் இங்கு 20 சதவீதம் தங்கம் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் நிலையில், 80 சதவீதம் பிற நாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனாலேயே மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

அமெரிக்க – ஈரான் போரின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை உயரவே, சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்தது. இதனிடையே இந்தியாவும் கடந்த மே மாதத்தில் தங்கத்தின் மீதா சுங்க வரியை 6 லிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. இதனாலும் இந்தியாவில் தங்கம் விலை குறைந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடங்கியதிலிருந்து திடீர் ஏற்றம் கண்டது.

இந்த விலையேற்றம் மேலும் தொடருமா என வாடிக்கையாளர்கள் மத்தியில் கவலை எழுந்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறைந்து சற்று ஆறுதல் அளித்து வருகிறது.

நேற்று (செப்டம்பர் 1) தங்கத்தின் விலை ஒட்டுமொத்தமாக ஒரு கிராம் ரூ.195 குறைந்து 14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,560 குறைந்து ரூ.1,13,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.10 குறைந்து ரூ.250-க்கு விற்பனையானது.

தங்க நகைப் பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், இன்று (செப்டம்பர் 2) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

You May Also Like

More From Author