பல்கலைக்கழகங்களில் தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் – யுஜிசி!

Estimated read time 0 min read

பல்கலைக்கழகங்களில் தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் என, யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக பல்கலைக்கழங்களுக்கு யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கையில், பல்கலைக்கழகங்களில் 45 நாட்கள் அல்லது அதற்கு மேலான தற்காலிக பணி நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2023 – 24 மற்றும் 2024 – 25ம் கல்வியாண்டில், கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர் விபரங்களை, தாக்கல் செய்ய வேண்டும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

You May Also Like

More From Author