டெல்லி சத்யா நிகேதன் கட்டிட விபத்து: 6 மாணவர்கள் பலி, போர்க்கால அடிப்படையில் தொடரும் மீட்புப் பணிகள்  

Estimated read time 0 min read

டெல்லியில் உள்ள சத்யா நிகேதன் பகுதியில், மாணவர்கள் தங்கியிருந்த 5 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் ஞாயிற்றுக்கிழமை மதியம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் தென் பகுதி வளாகம் அருகில் நடைபெற்ற இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் தரைதளம் மற்றும் பேஸ்மென்ட் பகுதியில் தகுந்த பாதுகாப்பின்றி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் சுமார் 30 முதல் 40 நபர்கள் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹாஸ்டல் டேஸ் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த விடுதியில் கேரளா, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் தங்கியிருந்து படித்து வந்தனர்.

You May Also Like

More From Author