ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய ‘தடை செய்யப்பட்ட மண்டலம்’: ஈரானின் முடிவும், பெட்ரோல் விலை உயர்வும்  

Estimated read time 1 min read

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய ‘தடை செய்யப்பட்ட மண்டலம்’ அமைக்கப்படும் என ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் அறிவித்துள்ளார்.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் பேசிய மொஹ்சென் ரெசாய், இந்த புதிய தடை மண்டலமானது அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோட்டிலிருந்து தொடங்கி பாரசீக வளைகுடாவின் பல பகுதிகளை உள்ளடக்கும் என்று தெரிவித்தார்.
இந்த எல்லைக்குள் அனுமதியின்றி நுழையும் அனைத்துக் கப்பல்களும் ஈரானின் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை முறியடிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

More From Author