அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Estimated read time 0 min read

அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அரசியல் காரணங்களுக்காகவே கே.என். நேருவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள ஸ்டாலின்

ஆட்சியமைக்க மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே கட்சியில் சேர்த்தது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு திமுக அஞ்சாது என்றும், சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author