ஷிச்சின்பிங் கலாச்சாரச் சிந்தனை குறித்த 2வது சர்வதேசக் கல்வியியல் கருத்தரங்கு

Estimated read time 1 min read

சீனப் பாணி நவீனமயமாக்கலை ஊக்குவிப்பதில் கலாச்சாரத்தின் முதன்மை நிலையை வலுப்படுத்துதல் என்ற தலைப்பில், ஷிச்சின்பிங் கலாச்சாரச் சிந்தனை குறித்த 2வது சர்வதேசக் கல்வியியல் கருத்தரங்கு 6ம் நாள் ஷென்ச்சேன் மாநகரில் நடைபெற்றது. சீனாவின் தொடர்புடைய ஆய்வு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஷிச்சின்பிங் கலாச்சாரச் சிந்தனையை ஆராயும்  நிபுணர்களும் விருந்தினர்களும் சுமார் 130 பேர் இதில் கலந்து கொண்டனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறை துணை தலைவர் ஹொங் டாயொங் இதன் துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். ஷிச்சின்பிங்கின் கலாச்சாரச் சிந்தனை, புதிய யுகத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கலாச்சாரக் கட்டுமான நடைமுறைகளிலிருந்து பெற்ற தத்துவத் தொகுப்பாகும். கலாச்சார வல்லரசின் கட்டுமானத்துக்கு இது வலுவான சிந்தனை ஆதரவு மற்றும் அறிவியல் ரீதியிலான வழிகாட்டியை வழங்கியது. கலாச்சார முதன்மை நிலையை வலுப்படுத்துவதில் சீனாவின் நடைமுறைகள், இதர நாடுகள், தங்களுக்குப் பொருந்திய நாகரிக வளர்ச்சி பாதையைத் தேடுவதற்கு ஞானம் அளித்துள்ளன என்று அவர் கூறினார்.

You May Also Like

More From Author