மியாமி விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பரிதாபமாக பலி  

Estimated read time 0 min read

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் பிரைம் ஏர் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று தரை இறங்கும்போது ஓடுதளத்தை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சான் ஜுவான் நகரில் இருந்து புறப்பட்ட அமேசான் பிரைம் ஏர் 7598 என்ற போயிங் 767 சரக்கு விமானம், மியாமி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தரை இறங்க முயன்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுதளத்தை கடந்து கட்டுப்பாட்டை இழந்த விமானம், தரையில் நின்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது பலமாக மோதித் தீப்பற்றி எரிந்தது.
இச்சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 3 பேர் கவலைக்கிடமான நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author