உஸ்பெகிஸ்தான் உச்ச மன்றத்தின் செனட்டின் தலைமை துணை தலைவரின் சிறப்பு பேட்டி

Estimated read time 1 min read

 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை முன்னிட்டு, உஸ்பெகிஸ்தான் உச்ச மன்றத்தின் செனட்டின் தலைமை துணை தலைவரும், இவ்வமைப்பை உருவாக்குவதில் பங்களிப்பவருமான சாதிக் சஃபோயேவ் அண்மையில் சீன ஊடக குழுமத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பல்வேறு நாடுகளின் வலிமையை ஒன்றிணைப்பது, தற்போது உலகளவில் பல்வேறு சவால்களை கூட்டாக எதிர்கொள்வது ஆகியவற்றை நோக்கமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கொண்டுள்ளது என்றார்.

உஸ்பெகிஸ்தானில் ஷிச்சின்பிங் படைப்புகளின் புத்தக அறை உருவாக்கப்பட்டது குறித்து, ஷிச்சின்பிங்கின் படைப்புகள் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு புதிய கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், ஷிச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய நான்கு முன்மொழிவுகள் உலகளாவிய சவால்களை கூட்டாக எதிர்கொள்வதற்காக பல்வேறு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளன என்றும், இது உலகிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

More From Author