இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயில்: மே 2027-இல் சோதனை ஓட்டம்  

Estimated read time 1 min read

இந்தியாவின் தொழில்நுட்ப திறனை உலகிற்கு பறைசாற்றும் வகையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் புல்லட் ரயிலின் கட்டமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்த ரயிலின் சோதனை ஓட்டம் வரும் மே 2027-க்குள் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் வதோதராவில் நடைபெற்ற ‘நமோ விகசித் பாரத்’ நிகழ்ச்சியில் ரூ.35,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டு புல்லட் ரயிலின் முதல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் உறுதித்தன்மையை சோதிக்கும் ‘Squeeze Test’ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.

You May Also Like

More From Author