கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் கமிஷன் அறிக்கை சட்டசபையில் தாக்கல்  

Estimated read time 1 min read

கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களை பலிவாங்கிய கொடூர கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கை, இன்று தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சியின் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்து தயாரிக்கப்பட்ட நச்சுச் சாராயத்தை அருந்தியதால் இப்பெரும் விபத்து நேரிட்டது.
இச்சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில், 145 பேர் மருத்துவ சிகிச்சைக்கு பின் காப்பாற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தின் பின்னணியைக் கண்டறியவும், மெத்தனால் விநியோக சங்கிலியை ஆராயவும், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்க பரிந்துரைகளை வழங்கிடவும் அப்போதைய அரசு நீதிபதி கோகுல்தாஸ் கமிஷனை அமைத்தது.

You May Also Like

More From Author