ஹியூமனாய்டு ரோபோக்களை போர் களத்திற்கு கொண்டு செல்ல சீனா தீவிர முயற்சி: ராய்ட்டர்ஸ் தகவல்  

Estimated read time 1 min read

சீனா தனது ராணுவப் படைகளான ‘மக்கள் விடுதலை இராணுவத்தில்'(PLA) மனித வடிவிலான ‘ஹியூமனாய்டு’ ரோபோக்களை போர் வீரார்களாக களமிறக்குவதற்கான தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
வணிக ரீதியிலான ரோபோக்கள் உற்பத்தியில் 95 சதவீத உலகளாவிய பங்கினை கொண்டுள்ள சீனா, தற்போது அந்த தொழில்நுட்பத்தை ராணுவப் பயன்பாட்டிற்கு மாற்றும் நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.
சீன ராணுவப் பல்கலைக்கழகத்தின்(NUDT) ஆய்வுக் கட்டுரைகளின்படி, நகர்ப்புறப் போர்களில் மனித வீரர்களுக்குப் பதிலாக இந்த ரோபோக்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிரிகள் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களுக்குள் நுழையும் 6 ‘போர் ரோபோக்கள்’ அடங்கிய குழு, ஒவ்வொரு தளமாகச் சென்று எதிரிகளை அழிக்கும் வகையில் வடிவமைப்பு உருவகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் எல்லை ஊடுருவல், உளவு பார்த்தல் மற்றும் ஆளில்லா காவல்பணி போன்ற பணிகளுக்கும் இவை பயன்படுத்தப்பட உள்ளன.

You May Also Like

More From Author