தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்துள்ள நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சரின் ஆலோசகர்கள் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் அறிக்கை அளித்துள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமைச்சர்களின் துறை செயல்பாடுகள், அதிகாரிகளுடனான ஆலோசனைகள், தொகுதிப் பணிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடனான அணுகுமுறை உள்ளிட்டவை மதிப்பீட்டில் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் இலாகா மாற்றப்பட உள்ளதாகவும்,
தவெகவைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் உட்பட 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு அமைச்சரின் விருப்பத்தின் பேரில் அவரது இலாகாவும் மாற்றப்பட உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
