சுய வளர்ச்சியுடன் மற்றவரின் வளர்ச்சிக்கு உதவுவது, சீனாவின் ஒத்துழைப்பு அடிப்படை

சுய வளர்ச்சியுடன் பிறரின் வளர்ச்சிக்கு உதவுவது, சீனாவின் ஒத்துழைப்பு அடிப்படையாகும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மாவ் நிங் 9ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை உயர்தரமுடன் கூட்டாக கட்டியமைப்பதன் மூலம், தொடர்புடைய நாடுகள் அடிப்படை கட்டுமானத்துக்கும் சீனா உதவி செய்து வருகிறது.

தொழில் சாதனங்கள் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப உற்பத்திப் பொருட்களை சீனா வழங்கி, அனுபவங்கள் மற்றும் தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டு, தெற்குலக நாடுகளில் உற்பத்தி வளர்ச்சிச் செலவைக் குறைக்க உதவி செய்து வருகிறது.

ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து, கூட்டு வெற்றியைப் பெற்று, கூட்டாக வளர்வது என்ற கருத்தை சீனா எப்போதும் நிலைநிறுத்தி, தெற்குலக நாடுகளின் நம்பகமான கூட்டாளியாகும் என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author