உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மையமாக மாறும் நோக்கில், யாங்சி ஆற்று டெல்டா பகுதியில் புத்தாக்க வளர்ச்சியை ஷாங்காய் மாநகரம் தலைமையேற்று வழிநடத்தி, சீனப் பொருளாதாரத்தின் உயர் தரமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், கடந்த ஏப்ரல் 29ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, ஷாங்காய் உலகளவில் செல்வாக்குமிக்க அறிவியல் தொழில்நுட்ப புத்தாக்க மையத்திற்கான வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தற்போது, ஷாங்காயிலுள்ள ஜாங்ஜியாங் உயர் தொழில்நுட்ப பூங்காவின் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில்,சராசரியாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் ஒன்றை கொண்டுள்ளது. உலகின் 20 முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் பாதியளவு , இந்த உயர் தொழில்நுட்ப பூங்காவில் திறந்தநிலை புத்தாக்க மையங்களை நிறுவியுள்ளன.மேலும் 20 முக்கிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு திட்டங்களையும் இம்மாநகர் கொண்டுள்ளது.
25,000 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஷாங்காயை தளமாக கொண்டு இயங்கி வருகின்றன. கூடுதலாக, தினமும் சுமார் 320 நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த சுற்றுகள், மருந்து ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு, செயற்கை நுண்ணறிவு ஆகிய மூன்று முக்கிய தொழில்கள் 800,000க்கும் மேற்பட்ட திறமையாளர்களைப் பணியமர்த்தியுள்ளன.
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் அண்மையில் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டு உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் உள்ள 100 முன்னணி புத்தாக்கத் தொகுதிகளின் பட்டியலில், ஷாங்காய்-சூஜோ 6வது இடத்தையும், ஹாங்சோ 13வது இடத்தையும், நான்ஜிங் 15வது இடத்தையும், ஹெஃபெய் 39வது இடத்தையும் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
