14ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடரின் 2ஆவது முழு அமர்வு, 8ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது. சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி, அதியுயர் மக்கள் நீதி மன்றம், அதியுயர் மக்கள் வழக்கறிஞர் மன்றம் ஆகியவற்றின் பணியறிக்கைகள், இதில் கேட்டறியப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டன. ஷி ச்சின்பிங், லீ ஜியாங், வாங் ஹூநீங் முதலியோர் இதில் கலந்துகொண்டனர்.
தேசிய மக்கள் பேரவையின் சார்பாக, சாவ் லேஜீ, தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் பணியறிக்கையை வழங்கினார். அவர் கூறுகையில்,
கடந்த ஓராண்டில், ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில், தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி, அரசியல் அமைப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும் கண்காணிப்பதையும் வலுப்படுத்தி, இச்சட்டத்தின் அதிகாரத்தையும் கௌரவத்தையும் பேணிக்காத்தது. சட்டமியற்றல் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சீன தனிச்சிறப்புடைய சோஷலிச சட்ட அமைப்பு முறையை மேம்படுத்தி வருகின்றது. சட்டத்தின் படி, கண்காணிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றது.
இக்கூட்டத்தில் அதியுயர் மக்கள் நீதி மன்றம், அதியுயர் மக்கள் வழக்கறிஞர் மன்றம் ஆகியவற்றின் பணியறிக்கைகளும் வழங்கப்பட்டன.