சீனாவின் தரம் குறைந்த ராணுவ தளவாடங்களைப் பயன்படுத்தியதால் வங்கதேச ராணுவத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. சிட்டகாங்கில் உள்ள ஹதாசாரி களப் பயிற்சித் தளத்தில், வங்கதேச ராணுவம் டைப் 69IIG (Type 69IIG) ரக சீனப் பீரங்கிகளைக் கொண்டு வழக்கமான களச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
பயிற்சியின் போது, சீனத் தயாரிப்பு பீரங்கியில் இருந்த குண்டு திடீரென எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இந்த பயங்கர விபத்தில் அபு பக்கர் சித்திக் மற்றும் தஸ்னீம் ரஃபாயத் ஆகிய இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அந்தப் பீரங்கியின் தளபதியான கேப்டன் மிர்சா இரு கைகளிலும் பலத்த காயமடைந்து, டாக்காவில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையில் (CMH) தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
TANK EXPLODES DURING FIRING EXERCISE
A Chinese-origin Type 69IIG tank reportedly exploded during a firing exercise in Hathazari, Chattogram, Bangladesh.
2 crew members reportedly killed
1 officer reportedly injured
Injured officer shifted to Chittagong CMH
The… pic.twitter.com/N9wojrDxau
— OsintTV
(@OsintTV) September 9, 2026
“>
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த விபத்தின் பதறவைக்கும் வீடியோவில், வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் பீரங்கியின் மீது நின்றுகொண்டிருந்த ஒரு வீரர் பல அடி உயரத்திற்கு காற்றில் தூக்கி வீசப்படுவது பதிவாகியுள்ளது.
Made in China. Used in Bangladesh. Two soldiers dead.
Type 59 tank explodes during firing exercise today. Officer also injured.@ChiefAdviserGoB – this guy got this Chinese stuff with 10 years of warranty ! pic.twitter.com/LBDL1mmTaD
— Major Madhan Kumar (Retd)
(@major_madhan) September 9, 2026
“>
சீனாவின் பழைய T-54/55 மற்றும் டைப் 59 ரகங்களைப் பின்பற்றி நவீனமயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த டைப் 69IIG பீரங்கியில், தரம் குறைந்த வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டதே இந்த விபத்துக்கு முதன்மைச் சாத்தியக்கூறாகக் கருதப்படுகிறது. சீன ராணுவ உபகரணங்களின் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், சம்பவ இடத்திலுள்ள வெடிமருந்துகள், பீரங்கியின் உதிரிபாகங்கள் மற்றும் சுடும் முறைமை குறித்து விசாரிக்க வங்கதேச ராணுவம் உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.






