லண்டனில் அஜித்தை சந்திப்பாரா முதல்வர் விஜய்

Estimated read time 1 min read

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் செப்டம்பர் 10 முதல் 16 வரை பிரிட்டன் நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். அதே நேரத்தில், நடிகரும் பிரபல பந்தய வீரருமான அஜித்குமார் பங்கேற்கும் ‘மிச்செலின் லீ மான்ஸ் கப்’ (Michelin Le Mans Cup) சர்வதேசக் கார் பந்தயம் லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணமும், அஜித்குமாரின் கார் பந்தயத் தேதிகளும் ஒரே நேரத்தில் அமைந்திருப்பதால், முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஜித்தின் பந்தயத்தைக் கண்டுகளிப்பார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. திரையுலகிலும் அரசியல் களத்திலும் முன்னணி நட்சத்திரங்களாகத் திகழும் இருவரின் இந்தச் சாத்தியமான சந்திப்பு, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தமிழகச் சட்டப்பேரவையில் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ உருவாக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, “இந்திய மோட்டார் விளையாட்டுத் துறைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி” என அஜித் பாராட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன் பின்னணியில், முதலமைச்சர் விஜய் தனது அரசுமுறைப் பயணத்தின் நடுவே நேரம் ஒதுக்கி அஜித்குமாருக்கு நேரில் வாழ்த்துத் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், இந்தச் சந்திப்பு குறித்து முதலமைச்சர் அலுவலகத்திலிருந்தோ அல்லது அஜித்குமார் தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது முற்றிலும் ரசிகர்களின் ஆர்வத்தால் பரவி வரும் ஒரு தகவலாகவே தற்போதைக்கு உள்ளது.

Will @CMOTamilnadu Vijay watch Ajith’s car race in London in person?

Actor Ajith Kumar is participating in the Michelin Le Mans Cup car race. With @CMOTamilnadu Vijay scheduled to visit London from September 10 to 16, reports suggest that he may watch Ajith’s race in person.… pic.twitter.com/RRZXWhvx9B

— Arun Vijay (@AVinthehousee) September 8, 2026

“>

முதலமைச்சரின் லண்டன் பயணம் முற்றிலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அட்டவணையைக் கொண்டிருப்பதால், நெருக்கடியான இந்தச் சூழலில் கார் பந்தயத்தைப் பார்க்க அவர் செல்வாரா அல்லது அஜித்தைச் சந்திப்பாரா என்பது செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில்தான் தெரியவரும்.

You May Also Like

More From Author