திறமையான தொழிலாளர் விசாக்கள் (skilled labour visas) மற்றும் இந்திய நிபுணர்களுக்கான பணி அனுமதிக்கான (work permits) வருடாந்திர வரம்பை கணிசமாக அதிகரிக்கும் திட்டத்தை ஜெர்மனி வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியின் இந்த நடவடிக்கை மேற்கத்திய நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு, வெள்ளிக்கிழமை, பிரதமர் மோடி விருந்தளித்தார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, திறமையான இந்திய தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை 20,000 லிருந்து 90,000 ஆக அதிகரிக்க Scholz நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறினார்.