தமிழக அரசு நிர்வாக வசதிக்காகவும், பணிகளை மேலும் விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் ‘இந்து சமய அறநிலையத் துறை’ என்ற புதிய தனித் துறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், தலைமை செயலகத்தில் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பணிகளை வேகப்படுத்தும் நோக்கில் இப்புதிய தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், இதுவரை இயங்கி வந்த இந்து சமய அறநிலையத் துறை ஆணையரகம் , இனி முழுமையாக இந்த புதிய தனித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.
தமிழக தலைமைச் செயலகத்தில் புதிய இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியீடு
