குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும் என போக்குவரத்துத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சாலைப் போக்குவரத்து நிறுவனம் தரமணி மூலம் இருசக்கர வாகனம், எல்எம்வி, பிஎஸ்பி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.
ஆண்டுக்கு சுமார் 3,000 பேர் இதன் மூலம் பயிற்சி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பயிற்சிப் பள்ளிகளில் வாகனத்திற்கு ஏற்ப ரூபாய்.5,000, 10,000, ரூ.15,000 வரை வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பயணிகள் சேவைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், 9,536 புறநகர் பேருந்துகளில் தற்போது உள்ள சரக்கு வைக்கும் இடங்களைப் பயன்படுத்தி, ஒருங்கிணைந்த சரக்குப் போக்குவரத்துச் சேவை அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.28.60 கோடி
வருவாய் கிடைக்கும்.
இத்திட்டத்திற்குத் தேவையான மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்பு உருவாக்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் எரிபொருள் சிக்கனம் மற்றும் உருளிப்பட்டைகளின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பணிமனையில் இயங்கும் 40 பேருந்துகளில் எரிபொருள் சென்சார் மற்றும் டயர் காற்றழுத்தக் கண்காணிப்பு அமைப்பு (TPMS) முன்னோடித் திட்டமாக ரூ.16.34 இலட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 42,114 ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் முழுமையான சுகாதாரப் பரிசோதனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் இணைந்து கட்டணமின்றி மேற்கொள்ளப்படும். அனைத்து பணிமனைகள் மற்றும் தொழிற்கூடங்களில் பணிபுரியும் 10,717 தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு BS-VI, CNG மற்றும் மின்சார பேருந்துகளின் பராமரிப்பு, பழுது கண்டறிதல், முன்கூட்டிய பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த மேம்பட்ட தி றன் பயிற்சி வழங்கப்படும்.
குறைந்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சிகள் நடத்தப்படும். பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT), தரமணி மூலம் இருசக்கர வாகனம், LMV, PSV மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 3,000 பேருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
