ஜப்பானில் வெள்ளத்தில் மூழ்கிய ஆசிய விளையாட்டு அரங்குகள்

Estimated read time 1 min read

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தொடங்குவதற்கு வெறும் 10 நாட்களே உள்ள நிலையில் பெரும் இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்துள்ளன. நகோயா நகரில் பெய்த கனமழை காரணமாகப் போட்டி நடைபெறும் அரங்குகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் போட்டி ஏற்பாடுகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

அப்பகுதியில் வெள்ள நிலைமை மிக மோசமடைந்ததைத் தொடர்ந்து 5-ஆம் நிலை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த பிலிப்பைன்ஸ் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். சுமார் மூன்று மணி நேரம் வாகன நிறுத்துமிடத்தில் தவித்த அவர்கள், பின்னர் தங்களது தங்குமிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

விளையாட்டு அரங்குகளைச் சுற்றியுள்ள சாலைகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியிருக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. ஆயிரக்கணக்கான சர்வதேச விளையாட்டு வீரர்கள் கூடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டிகள் தொடங்குவதற்குள் அரங்குகள் தயாராகுமா என்ற பெரிய கேள்விக்குறியையும், அச்சத்தையும் இந்த நிலவரம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக இந்தியா சார்பில் 503 பேர் கொண்ட பலமான வீரர், வீராங்கனைகளின் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குழுவின் ‘செஃப் டி மிஷன்’ தலைவராக சஹ்தேவ் யாதவும், துணைத் தலைவராக பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🚨

🇯🇵
Meanwhile in Nagoya, Japan
The City of Nagoya (population 2.5 million) just experienced the most amount of rainfall in its recorded history.

A level 5 Warning is in place after 104mm of rain landed within an hour.

Below is the Shonai River which flows through the city… pic.twitter.com/sInwUKMblb

— Concerned Citizen (@BGatesIsaPyscho) September 8, 2026

“>

செப்டம்பர் 19 அன்று இந்தப் போட்டிகள் முறைப்படி தொடங்கவுள்ளன. கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்த நிலையில், இந்த முறையும் அதேபோன்று வரலாற்றுச் சாதனை படைக்கும் நம்பிக்கையில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author