அசீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்ற உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனாவை வந்தடைந்த மாலி அரசுத் தலைவர் கெய்ட்டாவைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 2ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் சந்தித்துரையாடினார். சீன-மாலி உறவை நெடுநோக்குக் கூட்டாளியுறவாக உயர்த்துவதாக இரு நாட்டுத் தலைவர்களும் அறிவித்தனர்.
மாலியுடன் பாரம்பரிய நட்புறவை வளர்த்து தொடர்ந்து ஒன்றுக்கொன்று ஆதரவளித்து அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு இயன்ற அளவில் உதவியளிக்கச் சீனா விரும்புவதாகவும், மாலி உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் இணைந்து நடப்பு மன்ற உச்சிமாநாடு வெற்றிகரமாக நடத்துவதை முன்னேற்ற சீனா விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.
இரு நாட்டுறவை மேலும் வலுப்படுத்தி நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் உயர்த்தி வேளாண்மை, எரியாற்றல் மற்றும் சுரங்கத் தொழில், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவுடன் கூட்டு நன்மை தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும் என்று கெய்ட்டா விருப்பம் தெரிவித்தார்.
சீன-மாலி அரசுத் தலைவர்கள் சந்திப்பு
