மே திங்களில் ஐ.நா பாதுகாப்பவையின் தலைமை பொறுப்பு நாடான சீனா

Estimated read time 0 min read

மே முதல் நாள் ஐ.நா பாதுகாப்பவையின் தலைமை பொறுப்பு நாடாக சீனா மாறியுள்ளது. அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், ஐ.நா பாதுகாப்பவைக்கான சீன நிரந்தர பிரதிநிதி ஃபூசுங் கூறுகையில்,

ஐ.நா சாசனத்தின் ஆணை உரிமையையும் ஐ.நாவின் செல்வாக்கையும் மீண்டும் வலுப்படுத்துவது, மத்திய கிழக்கு பிரச்சினை பற்றிய அரசியல் தீர்ப்பை முன்னேற்றுவது, ஆப்பிரிக்க நாடுகளின் நிதானமான வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பது ஆகிய பணிகளில், மே திங்களில் ஐ.நா பாதுகாப்பவை முக்கியமாக கவனம் செலுத்துகின்றது என்றார்.

ஐ.நாவின் அடுத்த தலைமை செயலாளர் தேர்தல் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஐ.நா முக்கிய கட்டத்தில் இருக்கின்றது. வலிமை மிக்க, பலதரப்புவாதத்தில் பாடுபடும், ஐ.நா செல்வாக்கை மேம்படுத்தும் தலைமை செயலாளர் ஐ.நாவுக்கு தேவை என்றார்.

You May Also Like

More From Author