சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் 18ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து பிரிக்ஸ் ஒத்துழைப்பின் உயர் தர வளர்ச்சிக்கு நெறி வரைபடத்தை வரைந்து உலகிற்கு மேலதிக அமைதி மற்றும் செயலாக்கப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக உலகப் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பிரிக்ஸ் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் தலைவர் ஷாஸ்த்திரி கூறுகையில்,
பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது முதல், சீனா இதற்குத் தொடர்ச்சியான ஆக்கப்பூர்வ பங்கு ஆற்றி வருகின்றது என்று தெரிவித்தார். பிரிக்ஸ் ஒத்துழைப்பையும் திட்டவட்டமான நடைமுறையாக்கத்தையும் நெருக்கமாக இணைக்க வேண்டும் என்று சீனா கருதுகின்றது. இது தெற்குலக நாடுகளின் வளர்ச்சித் தொலைநோக்கிற்குப் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டார்.
எதிப்து வெளியுறவு விவகார ஆணையத்தின் உறுப்பினர் டியா ஹமீர் கூறுகையில், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராகவும் வலுவான ஆற்றலாகவும் சீனா உள்ளது என்று தெரிவித்தார்.
