தெற்காசிய வனவிலங்கு சட்ட அமலாக்க வலையமைப்பின் 8 உறுப்பு நாடுகள் 11ம் நாள் காட்மாண்டு அறிக்கையை ஏற்றுக்கொண்டன. பிராந்திய முயற்சிகளை வலுப்படுத்தி, சட்ட அமலாக்கம், நிதி புலனாய்வு மற்றும் குற்றவியல் நீதி ஒத்துழைப்பை ஒருங்கிணைந்து செயல்படுவது மூலம், சட்டவிரோதமான வனவிலங்கு வர்த்தகம் ஒடுக்கப்படுமென உறுப்பு நாடுகள் வாக்குறுதி அளித்துள்ளன.
தெற்காசிய வனவிலங்கு சட்ட அமலாக்க வலையமைப்பு என்பது, தெற்காசிய நாடுகளின் அரசு சார் அமைப்பாகும். ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்காளத் தேசம், பூட்டான், இலங்கை, மாலதீவு, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் அதில் அடங்கும். இவ்வமைப்பின் முதலாம் கூட்டம் செப்டம்பர் 10 மற்றும் 11ம் நாட்களில் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டில் நடைபெற்றது.
