பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் முதல் கட்ட கூட்டத்தில் சீன அரசுத்தலைவரின் உரை

Estimated read time 1 min read

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பர் 12ஆம் நாள் பிற்பகல் புது தில்லியில் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் கட்ட கூட்டத்தில் பங்கேற்று, “நமது காலத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு முன்னோடிகளாக மாறுதல்”என்ற தலைப்பில் முக்கிய உரையை ஆற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், இவ்வாண்டு பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்புக்கான 20ஆவது ஆண்டு ஆகும். கடந்த 20ஆண்டுகளில், பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு தொடர்ந்து வளர்ந்து விரிவடைந்து, தனது மிகுந்த உயிராற்றலை வெளிப்படுத்தி, தற்போது உலகில் வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகளுக்கான செல்வாக்கு மிக்க ஒத்துழைப்புத் தளமாக மாறியுள்ளது என்று தெரிவித்தார்.

தற்போது, உலகம் நூறு ஆண்டுகள் காணாத பெரும் மாற்றங்கள் அதிவேகமாக ஏற்பட்டு வருகின்றன. உலகளாவிய தெற்கு நாடுகள் வலுப்பெற்று வருகிறது. உலகின் பன்துருவப்போக்கைத் தடுத்து நிறுத்தமுடியாது. பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றில் சரியான பக்கத்தில் உறுதியாக நின்று, காலத்தின் முன்னோடிகளாக மாறி, சர்வதேச ஒழுங்கை மேலும் நீதியான மற்றும் நியாயமான திசையில் வழிநடத்தி, மனித குலத்தின் பொது எதிர்கால சமூககத்தைக் கட்டியெழுப்புவதை ஊக்குவிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புத்தாக்க வளர்ச்சியை முன்னெடுத்தல், அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காத்தல், நாகரிகங்களுக்கிடையே பரஸ்பர கற்றலை ஊக்குவித்தல், உலகளாவிய மேலாண்மையை சீர்திருத்தம் செய்து அதனை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் பிரிக்ஸ் நாடுகள் முன்னோடிகளாகத் திகழ வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

தவிரவும், 2027-ஆம் ஆண்டில் சீனா,  பிரிக்ஸ் அமைப்பின் தலைவர் பதவி வகிக்கும் நாடாக பொறுப்பை ஏற்று, 19வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தும் என்று ஷிச்சின்பிங் அறிவித்தார்.

You May Also Like

More From Author