தலைநகர் டில்லியில் 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இன்றும் (செப்.12), நாளையும் (செப்.13) நடைபெறுகிற இந்த மாநாட்டில் உலக நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதால் டில்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஏற்கனவே ரஷ்ய அதிபர், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக் எல்சிசி, அபுதாபி இளவரசர் முஹமது பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஆகியோர் டில்லி வந்தடைந்தனர்.
தற்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் புதுடில்லி வந்தடைந்தார். 2020ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பதற்றத்தைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலவி வந்த பதட்டங்களுக்குப் பிறகு, இரு தரப்பினரும் உறவுகளை மீட்டெடுக்கப் பணியாற்றி வரும் நிலையில், இந்தியா-சீனா உறவுகளில் ஒரு முக்கியமான தருணத்தில் அவரது வருகை அமைந்துள்ளது.
பிரதமர் மோடி இன்று மாலை 5.45 மணிக்கு பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திக்க உள்ளார்.
7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்துள்ளார்.
