26வது சீன சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தக கண்காட்சி செப்டம்பர் 8 முதல் 11ஆம் நாள் வரை நடைபெற்றது.
சீனாவில் முதலீட்டை கருப்பொருளாக கொண்ட ஒரே ஒரு தேசிய நிலை கண்காட்சியாகவும், 15வது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்கத்தில் நடத்தப்பட்ட முதலாவது முதலீட்டுக் கண்காட்சியாகவும் இது திகழ்கிறது. 129 நாடுகள் மற்றும் பிரதேசங்கள், 30 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த 1200க்கும் மேலான அரசு சார் நிறுவனங்களும், வணிகத் தொழில் நிறுவனங்களும் இதில் பங்கேற்றன. நாடுகளின் எண்ணிக்கையும் அமைப்புகளின் எண்ணிக்கையும் வரலாற்றில் உச்ச நிலையை எட்டியுள்ளன. மேலும், புதிய தர உற்பத்தித் திறன் பற்றிய அரங்கும், நிபுணத்துவம், நுட்பம், தனிச்சிறப்பு, புத்தாக்கம் ஆகியவற்றைக் கொண்ட தொழில் நிறுவனங்களின் சர்வதேச ஒத்துழைப்பு பற்றிய அரங்கும் இதில் அமைக்கப்பட்டன. இயந்திர மனிதர்கள், நுண்ணறிவு சாதனங்கள், தொழில் துறை பெரிய மாதிரிகள் உள்ளிட்ட புத்தாக்கச் சாதனைகள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
சீன நவீனமயமாக்கத்தில் முக்கியமாகப் பங்கேற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சீனாவை முதலீட்டு வெப்பமண்டலமாக எப்போதுமே கருதுகின்றனர்.
இவ்வாண்டு முற்பாதியில், சுமார் 4800 அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்தன. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைச் சேர்ந்த வணிக அமைப்புகள் வெளியிட்ட அறிக்கைகளின்படி, பெரும்பாலான அன்னிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவில் அதிக லாபம் பெற்றதால், முதலீட்டை அதிகரிப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளன. மேலும், அண்மையில், சீன வணிக அமைச்சகம், இயந்திர மின்னற்றல் சாதனங்கள், வேதியியல் எரியாற்றல், வாகனங்கள், மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த 84 முக்கிய அன்னிய முதலீட்டுத் திட்டப்பணிகளைப் புதிதாக அதிகரித்துள்ளது. அதன் மொத்த முதலீட்டுத் தொகை 1946 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. “சீனா வாய்ப்பு-2.0”என்பதை வெளிநாட்டு முதலீட்டளர்கள் கடைப்பிடிப்பதற்கு இது புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
