தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் உருவாகும் வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரி அமுதா எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடல் பகுதிகளில் தற்போது மூன்று தனித்தனி சுழற்சிக் மண்டலங்கள் ஒருங்கிணைந்து வருவதாகவும், இதன் தாக்கத்தால் தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளதாகவும் அமுதா தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை மிகத் தீவிரமாகச் செயல்பட்டு, குறிப்பாகத் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மிக அதிக மழை பதிவாகியுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
