TNEA2026 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம்!  

Estimated read time 1 min read

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் (BE/BTech) சேர விரும்புவோருக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) விண்ணப்பப் பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை மாணவர் சேர்க்கை மையம் அறிவித்துள்ளது.
ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த விண்ணப்பக் கால அவகாசம், தற்போது மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு ஜூன் 5-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதற்கு முன்னதாகவே மே 3-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
மே 31-ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை மொத்தம் 2,81,502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author