சந்தை ஒழுங்குமுறைக்கான சீனத் தேசிய நிர்வாகம் பிப்ரவரி 27ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டு இறுதிவரை, சீனத் தயாரிப்புத் துறையின் உற்பத்திப் பொருட்கள் வரையறைக்குப் பொருந்திய விகிதம் 93.93 விழுக்காடை எட்டியுள்ளது. இவ்விகிதம் 2023ஆம் ஆண்டில் இருந்ததை விட 0.28 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது.
2024ஆம் ஆண்டு, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, தொழில் சங்கிலியின் உருவாக்கம், நகரங்களின் தொடரவல்ல வளர்ச்சி ஆகியவற்றில் தரத்தின் பங்குகளை சந்தை ஒழுங்குமுறைக்கான பிரிவுகள் முழுமையாக முன்னேற்றி, தரத்தின் அடிப்படையில் தொழில் நிறுவனங்கள், தொழில் சங்கிலி, மாவட்டங்கள் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன.
மேலும், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சீனாவின் அளவுத்திருத்தம் மற்றும் அளவீட்டு திறன்களின் எண்ணிக்கை 1958ஐ எட்டி, உலகளவில் முன்னணியில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.