சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, அழைப்பை ஏற்று, ஜோர்டான் நாட்டின் துணைத் தலைமையமைச்சரும், தூதாண்மை மற்றும் வெளிநாட்டு வாழ் ஜோர்டான் மக்கள் விவகார அமைச்சருமான அய்மன் சஃபாடியுடன் ஆகஸ்டு 6ஆம் நாள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டார்.
வாங்யீ கூறுகையில், மறைமுகமான கொலை செயலுக்கு சீனா உறுதியுடன் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவிக்கிறது. இச்செயல், சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டை மீறி, ஈரானின் அரசுரிமையை ஊறுபடுத்தி, காசா பிரதேசத்தில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையின் வளர்ச்சிப் போக்கினைச் சீர்குலைத்து, பிரதேச நிலைமை மோசமாகி வருவதைத் தூண்டியுள்ளது. காசா பிரதேசத்தில் பன்முகங்களிலும் போர் நிறுத்தம் நனவாக்கப்படுவது, இந்நிலைமை மோசமாகி வருவதைத் தவிர்க்கும் முக்கிய வழிமுறையாகும். சர்வதேச சமூகம் இது குறித்து ஒத்த கருத்தை எட்டி, கூட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.