2026-27ஆம் கல்வியாண்டில் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்கள் வெளியீடு..!

Estimated read time 1 min read

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டில் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்கள், ‘tnfeecommittee.com’ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாவட்ட வாரியாகப் பொதுமக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தங்கள் பகுதியிலுள்ள பள்ளிகளின் முறையான கட்டண விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், கடந்த 2025-26ஆம் கல்வியாண்டில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் வசூலித்த கட்டண விவரங்களும் இதில் முழுமையாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு அங்கீகரித்துள்ள இந்தக் கல்விச் செலவுப் பட்டியலை, அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களின் நுழைவாயில் மற்றும் தகவல் பலகைகளில் பெற்றோர்களின் பார்வையில் படும்படி கட்டாயம் வெளிப்படையாக ஒட்ட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம், தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்பட்டு, நடப்பு மாணவர் சேர்க்கையில் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author