உலகளாவிய பாதுகாப்பு ஆட்சிமுறை பற்றிய கருத்துக் கணிப்பு

சர்வதேச அளவில் பதற்றமும், மோதல்களும் நிறைந்துள்ள சூழலில், ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைப்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளன. 

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் அண்மையில் நடத்திய பொது மக்கள் கருத்து கணிப்பின்படி, பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வின் மூலம் சர்வதேச சர்ச்சைகளைத் தீர்க்க வேண்டும் என்று 89.6 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். மேலும், மேலாதிக்கவாதம், வல்லரசு அரசியல், பிற நாடுகளின் மீது தன்னிச்சையாக மேற்கொண்ட தடை நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு 80.8 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு நாடுகள் சொந்தமான விழுமியங்கள் மற்றும் விதிமுறைகளை மற்ற நாடுகளின் மீது திணிக்கக்கூடாது என்று 74.5 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர் 

மேலும், சர்வதேச பாதுகாப்பு ஆட்சிமுறை, சில நாடுகளுக்கிடையிலான விஷயம் மட்டுமல்ல, உலகளாவிய தெற்கு நாடுகள், நிகழ்ச்சி நிரல் அமைப்பிலும் விதிமுறைகளை உருவாக்குவதிலும்,  பிரதிநிதித்துவம் வாய்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். இது குறித்து, 80.4 விழுக்காட்டினர் கூறுகையில், பனிப் போர் சிந்தனை மற்றும் வல்லரசு அரசியல், உலக அமைதியில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், பாதுகாப்புக்கான சவால்களைத் தீவிரமாக்கக்கூடும். என்றும் பல்வேறு நாடுகள் பயனுள்ள மற்றும் தொடரவல்ல பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author