பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தைச் சீனப் பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பண்பாட்டுத் தொழில் மற்றும் சுற்றுலாத் தொழிலைத் தொடர்ந்து செழிப்படையச் செய்து ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்க வேண்டும் என்றும், பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சியால் ஏற்படும் பயன்களின் மூலம் பொது மக்களின் புதிய தேவைகள் மற்றும் புதிய எதிர்பாப்புகளுக்கு மறுமொழி அளிக்க வேண்டும் என்றும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், கலைப் படைப்பு மற்றும் தயாரிப்பைச் செழுமைப்படுத்துவது, பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு மற்றும் பரவலை வலுப்படுத்துவது, பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தின் ஆதரவை அதிகரிப்பது, பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் துறையில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பது உள்ளிட்ட 8 துறைகளுக்கான பன்முக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, 54 முக்கிய திட்டப்பணிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
