மேம்பட்ட உற்பத்தித் தொழிலை முன்னெடுப்பது குறித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தன்னுடைய உத்தரவில், புதிய பயணத்தில், புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்புடைய சோஷலிச சிந்தனையை வழிகாட்டலாகக் கொண்டு, உயர்தர வளர்ச்சியையும் உயர்மட்டப் பாதுகாப்பையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அறிவுசார் மயமாக்கல், பசுமை மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த பாதையைக் கடைப்பிடித்து, மேம்பட்ட உற்பத்தி தொழிலை மேம்படுத்தவும், உண்மையான பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கலை முன்னெடுப்பதற்கு வலுவான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சீனத் தேசிய மேம்பட்ட உற்பத்தித் தொழில் மாநாடு செப்டம்பர் 16 மற்றும் 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஷிச்சின்பிங்கின் முக்கிய உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
