சீனத் துணை தலைமையமைச்சர் டிங் சுயேசியாங் 16ஆம் நாள் முற்பகல் குவாங்சியின் சின்சோ நகரில் நடைபெற்ற பிங்லு கால்வாயின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இக்கால்வாய் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த போது டிங் சுயேசியாங் கூறுகையில், பிங்லு கால்வாய் கட்டுமானப் பணிக்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மிகுந்த முக்கியத்துவம் அளித்து, பலமுறை முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்ததாகக் குறிப்பிட்டார். அதோடு, இக்கால்வாயின் திறப்பை வாய்ப்பாகக் கொண்டு, மேற்குப் பிரதேசத்தின் திறப்பை மேலும் விரிவாக்கவும், புதிய வளர்ச்சி அமைப்பை உருவாக்குவதில் மேலதிகப் பங்களிப்பை வழங்கவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
