சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு ஹாங்காங்கின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை(2026-2030) 16ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
இது, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான ஒட்டுமொத்த உயர்மட்ட வடிவமைப்பை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் அதற்கும் மேலான காலத்திற்கும் ஹாங்காங்கின் வளர்ச்சிக்கான இலக்குகள், நெடுநோக்கு திட்டத்திற்கான முன்னுரிமைகள் மற்றும் செயல்படுத்தும் வழிமுறைகள் இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. “ஒரு நாடு மற்றும் இரண்டு அமைப்புகள்” என்ற அமைப்பு முறையின் நடைமுறையை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் இது ஒரு மைல்கல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இத்திட்டம் குறித்து ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி லி ஜியாச்சௌ கூறுகையில், பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனைகளைப் பெறுதல், சர்வதேச போட்டியாற்றல் மற்றும் செல்வாக்கைத் தொடர்ந்து உயர்த்துதல், ஹாங்காங்கின் வடக்கு நகரப் பகுதி கட்டுமானத்தை விரைவுபடுத்துதல், மக்களின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துதல், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்தில் இணைந்து அதில் முக்கிய பங்காற்றுதல் ஆகிய 5 இலக்குகள் இதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க வணிக சங்கம் வெளியிட்ட 2026 “ஹாங்காங் வணிக நம்பிக்கை ஆய்வு அறிக்கை” யில், அமெரிக்க நிறுவனங்கள் ஹாங்காங்கின் வணிகச் சூழல் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும், ஹாங்காங்கின் வளர்ச்சி வாய்ப்புகளில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இவை வெளிக்காட்டுகின்றன. உலகளாவிய தாராள வர்த்தக மையமாகவும், நிதி அமைப்புமுறையின் நிலைதன்மையை நிலைநிறுத்தும் முக்கிய பகுதியாகவும் திகழும் ஹாங்காங், அதன் எதிர்கால நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் வளர்ச்சியை நிலைநிறுத்துவது, ஆசிய-பசிபிக் மற்றும் உலகப் பொருளாதாரதிற்கு முக்கியமான உந்துசக்தியை அளிக்கும் என்று சில வர்ணணையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
