“‘அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறுது….!” மத்திய அரசின் அதிரடி உத்தரவு….!!! 

Estimated read time 1 min read

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெறுவதில் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மிக முக்கியமான புதிய சட்டம் அமலுக்கு வரவுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற இந்த புதிய சட்டத் திருத்தம் மூலம், இனி பிறப்பு அல்லது இறப்பைத் தாமதமாகப் பதிவு செய்வது மிகவும் கடினமான நடைமுறையாக மாறப்போகிறது.

பொதுவாக குழந்தை பிறப்பையோ அல்லது குடும்பத்தில் நிகழும் இறப்பையோ குறிப்பிட்ட நாட்களுக்குள் அரசுத் துறையில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இனிமேல் 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தாமதமாகப் பதிவு செய்தால், மாவட்ட ஆட்சியர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் போன்ற உயர்மட்ட அதிகாரிகளின் முறையான அனுமதி மற்றும் விசாரணைக்குப் பிறகே சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை 2 ஆண்டுகளைத் தாண்டி தாமதமானால் நிலைமை இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறப்பு அல்லது இறப்பைப் பதிவு செய்ய விரும்புவோர், நேரடியாக நீதிமன்றத்தை அணுகி முதல் வகுப்பு நீதித்துறை நடுவரிடம் முறையான உத்தரவைப் பெற்றால் மட்டுமே சான்றிதழைப் பெற முடியும்.

1961-ஆம் ஆண்டின் பிறப்பு இறப்பு பதிவுச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள், போலியான சான்றிதழ்கள் உருவாக்கப்படுவதை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியப் பதிவாளர் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமார் நாராயண் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒரு மனிதனின் சட்டப்பூர்வ அடையாளத்திற்கும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் இந்தச் சான்றிதழ்கள் மிகவும் முக்கியமானவை. எனவே, பொதுமக்கள் இனி தேவையற்ற காலதாமதம் செய்யாமல், குழந்தை பிறந்த உடனேயோ அல்லது இறப்பு நிகழ்ந்த உடனேயோ உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

More From Author