ஜனவரி 8ஆம் நாள் நடைபெற்ற சீனப் பாரம்பரிய மருத்துவப் பணியகத் தலைவர்களின் கூட்டத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டு, சீனாவில் 90 விழுக்காட்டுக்கும் மேலான மாவட்டங்களில் சீனப் பாரம்பரிய மருத்துவ நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டம் மற்றும் சிறு நகரச் சுகாதார மருந்தகங்களிலும், குடியிருப்புப் பகுதியின் சுகாதாரச் சேவை மையங்களிலும், சீனப் பாரம்பரிய மருத்துவ மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீனப் பாரம்பரிய மருத்துவச் சேவை மேலும் அதிகமாகப் பரவல் செய்யப்பட்டு, அதன் சேவை திறன் தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.
நோய் தடுப்பு, சிகிச்சை, புனர்வாழ்வு உடற்பயிற்சி ஆகியவற்றில் சீனப் பாரம்பரிய மருத்துவம் மற்றும் மருந்துகள் தனிச்சிறப்புடைய மேம்பாடுகளைக் கொண்டுள்ளன.
2025ஆம் ஆண்டு, சீனப் பாரம்பரிய மருத்துவமனைகளில், குழந்தை மருத்துவப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, கடும் நோய்ப் பிரிவு, முதியோர் நோய்ப் பிரிவு முதலியவற்றில் சீனப் பாரம்பரிய மருத்துவச் சேவையைச் சீனா வலுப்படுத்தும் அதேவேளையில், சீனப் பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை வழிக்காட்டல் மையம், சீனப் பாரம்பரிய மருந்துகளுக்கான பகிர்வு மையம் முதலியவற்றின் கட்டுமானத்தையும் முன்னேற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.