சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியுடன் தொடர்புடைய ஒரு புதிய நுகர்வோர் வர்த்தகக் கண்காட்சி ஷாங்காயில் நிறைவடைந்தது. இது, உலகளாவிய கண்காட்சி தயாரிப்புகளை சீன நுகர்வோருக்கு நேரடியாகக் கொண்டு வருகிறது.
யு-கண்காட்சி என பெயர் சூட்டப்பட்டுள்ள இது, சிறிய சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி என்றும் அழைக்கப்படுகிறது. முதன்முறையாக நடைபெற்ற இக்கண்காட்சியில் 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன.
சீன-இலங்கை வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புச் சங்கத்தின் தலைவர் சிரஞ்சயா உடுமுல்லகே கூறுகையில், முதன்முறையாக யு-கண்காட்சியை அமைப்பாளர்கள் நடத்தியுள்ளனர். சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியானது, நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்தை இணைக்கும் அதிகாரப்பூர்வமான நிகழ்வாகும். அதில், பலரும் பங்கேற்க முடிவதில்லை. அவர்களுக்கு, இக்கண்காட்சி சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்றார்.
ஷாங்காயின் நிதி மற்றும் பொருளாதாரப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் லாவோ குவோலிங், யு-கண்காட்சியானது, திறப்புக் கொக்கைக்கான சீனாவின் உறுதிப்பாடு மற்றும் தொலைநோக்கை வெளிக்காட்டுவதுடன், பல நிறுவனங்கள் சீனாவின் மிகப் பெரிய சந்தையை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் உள்ளது என்றார்.
