20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் திங்கள் 19ஆம் நாள் ஜப்பானின் நாகோயாவில் துவங்கியது.
16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டி அக்டோபர் 4ஆம் நாள் நிறைவடையும். இதில் மொத்தம் 469 தங்கப் பதக்கங்கள் வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் பங்கேற்க சீனா 1274 பேர் கொண்ட பிரதிநிதிக் குழுவை ஜப்பானுக்கு அனுப்பியுள்ளது. அவர்களில் 815 வீரர்கள் 38 விளையாட்டுக்களில் 369 நிகழ்வுகளில் போட்டியிட உள்ளனர்.
