எல்.கே.அத்வானியிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!

தேசிய ஜனநாய கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமர் மோடி பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோரை சந்தித்து ஆசி பெற்றார்.

டெல்லியில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் தேசிய தேசிய ஜனநாய கூட்டணி எம்பிக்கள் குழு தலைவராக பிரதமர் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இல்லத்திற்கு சென்ற பிரதமர். அவரிடம் பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார்.

பின்னர் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இல்லத்திற்கு மோடி சென்றார். அப்போது பிரதமருக்கு இனிப்பு ஊட்டி ராம்நாத் கோவிந்த் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

You May Also Like

More From Author