சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜனவரி 14-ஆம் தேதி, லெபனான் குடியரசின் புதிய அரசு தலைவர் ஜோசெஃப் ஓன்னுக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
இந்த வாழ்த்து செய்தியில் ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவுக்கும் லெபனானுக்குமிடையில் பாரம்பரிய நட்பு நிலவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் இரு நாட்டு உறவு சீரான வளர்ச்சி போக்கை நிலைநிறுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையும் மக்களின் நட்பும் ஆழமாகி வருகிறது.
சீன-லெபனான் உறவை மேம்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் அளித்து, அரசுத் தலைவர் ஓன்னுடன் இணைந்து, பல்வேறு துறைகளில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்புகளை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்கு நலன்களை விளைவிக்க விரும்புகிறேன் என்றும், தேசிய இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டை பேணிக்காப்பதில் லெபனானுக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு தொடர்ந்து உதவி அளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.