துவரம் பருப்பு, பாமயிலை சரியாக வழங்குக…. தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை…!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரேஷன் கடையில் பாமாயில், துவரம் பருப்பை சரியாக வழங்குக என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நன்னடதை விதிகளைக் காரணம் காட்டி மே மாதம் வழங்கப்பட வேண்டிய ரேஷன் பொருட்களை வழங்காமல் புறக்கணித்தது திமுக அரசு.

மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கும் வழங்கப்பட வேண்டிய பாமாயிலும், துவரம் பருப்பையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற துவரம் பருப்பை அனுப்பிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

More From Author