சீன-அமெரிக்க உறவு ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு நிதானப் பாதையில் செல்ல வேண்டும்

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பின் அழைப்பின் பேரில், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் வரும் 23ஆம் நாள் முதல் 25ஆம் நாள் வரை அமெரிக்காவில் அரசுமுறைப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஆக்கப்பூர்வமான நெடுநோக்கு நிதானப் பாதையில் இரு தரப்புகளும் தொடர்ச்சியாக முன்னேறும் சமிக்கையை இப்பயணம் வெளிப்படுத்துகின்றது.

சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம் இது குறித்து 39 நாடுகளின் சுமார் 12000 பேரிடையில் பொது மக்கள் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் பங்கேற்றவர்களில் 75 விழுக்காட்டினர் சீன-அமெரிக்க உறவு சர்வதேச உலகிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருத்து தெரிவித்தனர். குறிப்பாக இதில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களில் 76.7 விழுக்காட்டினர் அதே கருத்தை வெளிப்படுத்தினர்.

வர்த்தகம், அறிவியல் தொழில் நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் சீனாவும் அமெரிக்காவும் பல அறைகூவல்களை எதிர்நோக்குகின்றன. இரு தரப்புகள் நேரடி பரிமாற்றம் மேற்கொள்வதன் மூலம் கருத்துவேற்றுமைகளைக் கட்டிப்படுத்தி பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சர்வதேசச் சமூகம் எதிர்பார்க்கின்றனது.

You May Also Like

More From Author