நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் வேளாண் துறைப் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!

9ஆவது சீன விவசாயிகளின் அறுவடை விழா வருவதையொட்டி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் வேளாண் துறைப் பணியாளர்களுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச்செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவக் கமிட்டியின் தலைவருமான ஷி ச்சின்பிங் விழா வாழ்த்துக்களையும் அன்பான வணக்கத்தையும் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு சீனாவின் கோடைக்காலத்தானிய விளைச்சல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இலையுதிர்கால தானிய விளைச்சல் அமோகமாக உள்ளது என்று கூறிய அவர்,

பல்வேறு நிலை கட்சிக் கமிட்டிகளும் அரசுகளும் கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் திட்டத்தைப் பன்முகங்களிலும் முன்னேற்றி, வேளாண் துறையின் ஒட்டுமொத்த உற்பத்தி திறனையும் தரத்தையும் பயனையும் முயற்சியுடன் அதிகரிக்க வேண்டும் என்றும், வெவ்வேறான பிரதேசங்களின் நடைமுறை நிலைமைக்கு ஏற்ப, மக்கள் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்ற கிராமப்புறங்களைக் கட்டியமைத்து, பரந்த விவசாயிகளின் வாழ்வை இன்பமயமானதாக மாற்றப் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

You May Also Like

More From Author